Sangathy
India

வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க வாக்காளர்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்பும் தேர்தல் கமிஷன்..!

குஜராத் மாநிலத்தில் உள்ள 26 மக்களவை தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக மே 27-ஆம் திகதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்கான முன்னேற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக செய்து வருகிறது.

இந்த நிலையில் தேர்தலில் வாக்களிக்கும் சதவீதத்தை அதிகரிக்க மாநிலம் முழுவதும் வாக்காளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு 20 லட்சம் அழைப்புகளை அனுப்ப முடிவு செய்துள்ளதாக தேர்தல் கமிஷன் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்,

“ஆண் மற்றும் பெண் வாக்காளர்களுக்கு இடையேயான வித்தியாசம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கும் 13,000-க்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளை இலக்காகக் கொண்டு இந்த முயற்சி முன்னெடுக்கப்படுகிறது. பெண் வாக்காளர்கள் தங்களின் நெருக்கடியான கால அட்டவணையில் இருந்து நேரத்தை ஒதுக்கி தங்கள் குடும்பத்தினருடன் வாக்களிக்கவும், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்குவிக்கவும் அவர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்படும்” என்றார்.

Related posts

பசியால் அழுது துடித்த கைக்குழந்தைக்கு தாய்ப்பால் புகட்டிய கோவை இளம்பெண்..!

Lincoln

Cable operators in Nepal ban private Indian news channels, Doordarshan exempted

Lincoln

கொளுத்தும் வெயிலால் ரெட் அலர்ட் : இந்திய வானிலை மையம் எச்சரிக்கை..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy