Sangathy
World Politics

வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பேருக்கு HIV உறுதி..!

அமெரிக்காவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்களுக்கு எச்ஐவி உறுதி செய்யபட்டு இருக்கிறது. இதனால், அந்நாட்டில் செயல்பட்டுவரும் ஸ்பாக்களுக்கு கடுமையான கட்டுபாடுகள் விதிக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ ஸ்பாவில் வேம்பையர் பேஷியல் செய்த மூன்று பெண்கள் எச்ஐவியால் பாதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல் வெளியாகி இருக்கிறது. வேம்பையர் பேஷியல் என்பது காஸ்மெட்டிக் முறையாகும். முகத்தை பொலிவாகவும் சுருக்கம் இல்லாமலும் வைக்க இந்த பேஷியல் உதவும் என காஸ்மெட்டாலஜீஸ்ட்கள் கூறுகிறார்கள். பிரபலமான இந்த வேம்பையர் பேஷியல் அமெரிக்கா போன்ற மேலை நாடுகளில் அதிக மக்களால் பயன்படுத்தப்பட்டது.

இப்போது, இது இந்தியாவிலும் மிகவும் பிரபலமானதாக இருக்கிறது. சாதாரண மக்களும் இப்போது இந்த வகை பேஷியலை செய்து கொள்கிறார்கள். மற்ற காஸ்மெட்டிக் பேஷியல்களைவிட இந்த வேம்பையர் பேஷியல் குறைந்த விலையில் செய்யப்படுகிறது. இதனால், முகத்தில் பொலிவு, சுருக்கமின்மை ஏற்பட்டாலும் முறையற்ற முறையில் இந்த பேஷியல் செய்வது கண்டிப்பாக ஆபத்தை விளைவிக்கும்.

வேம்பையர் பேஷியலுக்காக பேஷியல் பெற விரும்புவோரின் உடலில் இருந்து இரத்தம் எடுக்கப்படும். இந்த இரத்தத்தில் இருந்து பிளாஸ்மா தனியாக பிரிக்கப்படும். பிரிக்கபட்ட பிளாசமாவை ஊசிமூலம் முகத்தில் செலுத்துவார்கள். இதுதான் வேம்பையர் பேஷியலின் செயல்முறையாகும்.

இந்நிலையில், அமெரிக்காவில் இந்த பேஷியலை செய்து கொண்ட மூன்று பெண்களுக்கு HIV உறுதிசெய்யப்பட்டு இருக்கிறது. இதனை அமெரிக்காவின் சிடிசி (நோய் தடுப்பு மையம்) உறுதி செய்துள்ளது. இதுதொடர்பாக சிடிசி வெளியிட்ட அறிக்கையில், “அமெரிக்காவின் நியூ மெக்சிகோவில் ஸ்பா ஒன்று செயல்பட்டு வந்தது.

இந்த ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்த பெண் எச்ஐவியால் பாதிக்கப்பட்டார். அதன்பிறகு மேலும் 2 பேர் எச்ஐவியால் பாதிக்கப்பட்டனர். இவர்கள் 2 பேரும் ஒரே ஸ்பாவில் வேம்பயர் ஃபேஷியல் செய்தவர்கள். ஸ்பா பற்றி விசாரித்தபோது அது உரிய அனுமதியின்றி லைசென்ஸ் இன்றி இயங்கியது தெரியவந்தது.

இதையடுத்து கடந்த 2018 ல் அந்த ஸ்பா மூடப்பட்டது. தற்போது ஸ்பா உரிமையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். வேம்பயர் ஃபேஷியல் மூலம் தான் 3 பெண்களுக்கும் எச்ஐவி பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்த ஸ்பாவில் சிகிச்சை பெற்று கொண்ட மற்றவர்களும் பரிசோதனை செய்த கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேம்பையர் பேஷியல் செய்யும்போது பயன்படுத்திய ஊசிமூலம் மூவருக்கும் HIV ஏற்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. மேலும், ஒரு நபருக்கு பயன்படுத்திய அதே ஊசியை மற்றவருக்கு பயன்படுத்தி, அதன்மூலம் மூவருக்கும் HIV ஏற்பட்டு இருக்கலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாது, குறிபிட்ட இந்த ஸ்பாவில் சிகிச்சை பெற்ற 59 பேருக்கு HIV பாதிக்கபட்டு இருக்கும் என்கிற அதிர்ச்சித் தகவலும் கிடைத்துள்ளது. எனினும், HIV தொற்று உறுதி செய்யபட்டவர்களின் எண்ணிக்கை இன்னும் சரியாக கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சம்பவத்தினால் அமெரிக்காவில் இருக்கும் அனைத்து ஸ்பாவிற்கும் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டு இருக்கிறது.

Related posts

பாகிஸ்தானில் படகு கவிழ்ந்து 12 மீனவா்கள் உயிரிழப்பு : இருவர் மாயம்..!

Lincoln

ரஷியாவின் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் உக்ரைன் அதிபர்..!

tharshi

மூன்று மடங்கு அதிகரித்த இறப்பு எண்ணிக்கை : தலைதூக்கும் டெங்கு – பீதியில் மக்கள்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy