Sangathy
News

புதிய மின்சார சட்டமூலத்தை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: கஞ்சன விஜேசேகர

Colombo (News 1st) மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான புதிய மின்சார சட்டமூலத்தை தயாரிக்கும் பணி இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றை வௌியிட்டு அமைச்சர் கஞ்சன விஜேசேகர இதனை குறிப்பிட்டுள்ளார்.

சட்டமூலம் தயாரிக்கப்பட்ட பின்னர் அபிவிருத்தி நிறுவனங்கள், மறுசீரமைப்பு தொடர்பான நிபுணர்கள் மற்றும் உரிய தரப்பினரிடம் இதனை சமர்ப்பித்து, அவர்களது கருத்துகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

இவர்களிடமிருந்து பெறப்படும் பரிந்துரைகளுக்கு அமைய தயாரிக்கப்படும் சட்டமூலம் இந்த மாத இறுதிக்குள் சட்ட வரைஞர்கள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் பின்னர் சட்டமூலம் அனுமதிக்காக அமைச்சரவை மற்றும் பாராளுமன்றத்திற்கும் சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜூலை மாதத்திற்குள் மின்சார கட்டணங்கள் மீளாய்வு செய்யப்படும்: கஞ்சன விஜேசேகர

Lincoln

தமிழர்களின் உணர்வோடு கலந்த தைப்பொங்கல் பண்டிகை

John David

India top court frees convicts in ex-PM Rajiv Gandhi’s killing

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy