Sangathy
News

மருந்து பொருட்களின் விலைகளை குறைக்க திட்டம் – சுகாதார அமைச்சர்

Colombo(News 1st) எதிர்வரும் 3 வாரங்களுக்குள் மருந்து பொருட்களுக்கான விலைகளை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

டொலருக்கு இணையாக ரூபாவின் பெறுமதி வலுவடைந்ததன் பயனை கூடிய விரைவில் மக்களுக்கு பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

அதற்கமைய மருந்து பொருட்களின் விலைகளை 10 தொடக்கம் 15 வீதத்தால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபையின் உறுப்பினர்கள் இன்று(17) கூடவுள்ளனர்.

ரூபாவின் பெறுமதி உயர்வடைந்த தரவுகளை ஆராய்ந்து மருந்து பொருட்களின் விலைத்திருத்தம் தொடர்பில் தயாரிக்கப்பட்ட அறிக்கையை சுகாதார அமைச்சரிடம் உடனடியாக கையளிக்கவுள்ளதாக தேசிய அபாயகர ஔடதங்கள் கட்டுப்பாட்டு அதிகார சபை அறிவித்துள்ளது.

Related posts

Pakistan’s FIA chief silent on extradition of Dawood, Hafiz Sayeed to India

Lincoln

COPE summons Labour Secy.

Lincoln

மருத்துவ விநியோகப் பிரிவு பணிப்பாளர் உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல் நீடிப்பு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy