Sangathy
News

GSP+ வரிச்சலுகை நான்கு வருடங்களுக்கு நீடிப்பு

Colombo (News 1st) இலங்கைக்கு பெற்றுக்கொடுக்கப்படும் GSP+ வரிச்சலுகையை 2027 ஆம் ஆண்டு டிசம்பர்  31 ஆம் திகதி வரை 4 வருட காலத்திற்கு நீடிப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியம்  தீர்மானித்துள்ளது.

இந்த வரிச்சலுகை இந்த வருடம் டிசம்பர் 31ஆம் திகதி நிறைவடையவிருந்தது.

புதிய  GSP+ வரிச்சலுகை தொடர்பான கலந்துரையாடல் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இலங்கை போன்ற நாடுகள் முன்னுரிமை தீர்வை வரி சலுகைகளை இழக்காது என ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை,  2022 ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இலங்கை 3.2 பில்லியன் யூரோ பெறுமதியான பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

Related posts

Hikkaduwa becomes Ryan Reynolds’ favourite location

Lincoln

பிரபல அழகுக்கலை நிபுணர் பி​ரேமசிறி ஹேவாவசம் காலமானார்

John David

மின் கட்டண அதிகரிப்பு, மின் வெட்டுக்கு எதிராக எதிர்க்கட்சி தலைவர் மனு

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy