Sangathy
News

நெடுந்தீவு கடற்பரப்பில் கைதான 15 இந்திய மீனவர்கள் விடுதலை

Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன் பிடித்தமைக்காக நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி பிரவேசித்து மீன்பிடித்தமைக்காக 15 இந்திய மீனவர்கள் கடந்த 9 ஆம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 15 இந்திய மீனவர்களும்  ஊற்காவற்துறை நீதிமன்றில் இன்று ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, 15 மீனவர்களுக்கும் எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட  நீதவான் J.கஜநிதிபாலன், மீனவர்கள் 15 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 18 மாத கால சாதாரண சிறைத்தண்டனை எனும் நிபந்தனைகளுடன் விடுதலை செய்து தீர்ப்பளித்தார்.

இவர்களது படகுகள் தொடர்பிலான  விசாரணை அடுத்த மாதம் 4 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதனையடுத்து, மீனவர்கள் 15 பேரும் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்தியத் துணைத் தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விடுதலை செய்யப்பட்ட மீனவர்களை மிரிஹான இடைத்தங்கல் முகாமிற்கு அனுப்பி, இந்தியாவிற்கு அனுப்பி வைக்க  நடவடிக்கை எடுக்குமாறும் ஊர்காவற்துறை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

US throws its weight behind GTF initiative, TNA distances itself from Himalaya Declaration

John David

கோழி இறைச்சி விலை மேலும் அதிகரிப்பு

Lincoln

மட்டக்களப்பில் உள்ள முகாம்களை அகற்றுமாறு சாணக்கியன் எம்.பி. கோரிக்கை

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy