Sangathy
News

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களை கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையை பெற தீர்மானம்

Colombo (News 1st) நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணங்களைக் கண்டறிய பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் ஆலோசனையைப் பெறுவதற்கு பாராளுமன்றத்தின் விசேட குழு தீர்மானித்துள்ளது.

அனைத்து பல்கலைக்கழகங்களினதும் பொருளியல் பீட தலைவர்களுடன் கலந்துரையாடுவதற்கு தமது குழு தீர்மானித்துள்ளதாக நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

நாடு வங்குரோத்து நிலையை அடைவதற்கான காரணங்களை கையாள்வதற்கான அடிப்படை திட்டத்தை குறித்த புத்திஜீவிகளுடன் கலந்தாலோசித்து தயாரிக்கவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நாடு வங்குரோத்து அடைவதற்கான காரணத்தை கண்டறிவதே தமது குழுவின் முக்கிய நோக்கம் என சாகர காரியவசம் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படாதவாறு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது தொடர்பில் பரிந்துரைகள் மேற்கொள்ளப்படும் என நாட்டின் வங்குரோத்து நிலைக்கான காரணங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட குழுவின் தலைவர் சாகர காரியவசம் மேலும் கூறினார்.

Related posts

Child injured in accidental discharge of police firearm: SI remanded

Lincoln

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரிவில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

John David

Homeland Security gets new role under Trump monument order

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy