Sangathy
News

கொழும்பு கோட்டையில் நடத்தப்படவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை உத்தரவு

Colombo (News 1st) முன்னிலை சோசலிச கட்சியுடன் இணைந்த தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் மற்றும் ஏனைய அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து இன்று(28) கொழும்பு கோட்டையில் நடத்தவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு தடை விதித்து கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கோட்டை பொலிஸார் முன்வைத்த விடயங்களை கருத்திற்கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தொழிலாளர் போராட்ட மத்திய நிலையத்தின் ஏற்பாட்டாளர் துமிந்த நாகமுவ, ஐக்கிய மக்கள் சக்தியின் முஜிபுர் ரஹ்மான் மற்றும் ஹிருணிகா பிரேமச்சந்திர, சுதந்திர மக்கள் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்களான சரித்த ஹேரத், வாசுதேவ நாணயக்கார உள்ளிட்ட 24 பேருக்கு கொழும்பின் சில பகுதிகள் மற்றும் பல வீதிகளுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க, இன்று(28) காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரையான காலப்பகுதிக்குள் கொழும்பு கோட்டை பொலிஸ் பிரிவிலுள்ள ஜனாதிபதி செயலகம், ஜனாதிபதி மாளிகை, நிதி அமைச்சு மற்றும் இலங்கை மத்திய வங்கி போன்ற அரச நிறுவனங்களுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதனை தவிர, CTU சந்தியிலிருந்து செரமிக் சந்தி, லோட்டஸ் வீதி, யோர்க் வீதி, வங்கி மாவத்தை, காலி முகத்திடல்  சுற்றுவட்டத்திலிருந்து NSA சுற்றுவட்டம் வரையிலான காலி வீதிகளுக்குள் பிரவேசிப்பதற்கும் தடை செய்யப்பட்டுள்ளது.

பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் விளைவிக்கக் கூடாது எனவும் மக்களை தூண்டும் வகையில் வன்முறைச் சம்பவங்களில் ஈடுபடக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை மீறுவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

President pledges fullest state support to take Theravada Buddhism to the world

Lincoln

Jetwing Sea celebrates its Golden Jubilee

Lincoln

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy