Sangathy
News

சைபர் தாக்குதல் தொடர்பான விரிவான விசாரணை ஆரம்பம் – தொழில்நுட்ப அமைச்சு

Colombo (News 1st) அரச மின்னஞ்சல் முகவரிகளை இலக்கு வைத்து அண்மையில் மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் தொடர்பில் விரிவான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனத்திடம் அறிக்கை கோரப்பட்டுள்ளதாக தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.

கடந்த மாதம் 26ஆம் திகதி சைபர் தாக்குதல் காரணமாக பல அரச நிறுவனங்களின் மின்னஞ்சல் பரிமாற்ற தரவுகள் காணாமல் போயுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப நிறுவனம் தெரிவித்திருந்தது.

gov.lk டொமைனுக்குச் சொந்தமான தரவு அமைப்பை புதுப்பிக்கத் தவறியதன் காரணமாக தாக்குதலைத் தடுக்க முடியவில்லை என அதன் பிரதம நிறைவேற்று அதிகாரி மகேஷ் பெரேரா தெரிவித்தார்.

இதேவேளை, சைபர் தாக்குதலை நடத்திய குழுவின் தகவல்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

Injustice Everywhere

Lincoln

தரமற்ற மருந்து இறக்குமதி: சுகாதார அமைச்சின் விநியோகப் பிரிவின் நால்வர் கைது

John David

Themed Party Nights at Cinnamon Red Colombo

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy