Sangathy
News

விலை குறைப்பிற்கு இணங்காவிட்டால் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் தீர்மானம் எடுக்கப்படும் – வர்த்தக அமைச்சர்

Colombo (News 1st) கோழி இறைச்சி விலையை குறைப்பது தொடர்பில் இன்று(21)  விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளது.

வர்த்தக அமைச்சர் மற்றும் கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இடையே இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இன்றைய(21) கலந்துரையாடலின் போது கோழி இறைச்சி விலையை 200 ரூபாவினால் குறைப்பதற்கு கோழி இறைச்சி உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவிப்பார்கள் என எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

அவ்வாறில்லை என்றால் கோழி இறைச்சி இறக்குமதி தொடர்பில் இன்று(21) தீர்மானமொன்று எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ சுட்டிக்காட்டியுள்ளார்.

சந்தையில் தற்போது ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1,250 ரூபாவாக காணப்படுகின்றது.

Related posts

யாழில். 800 ரூபாய் கடன் கொடுக்கல் வாங்கலில் பறிபோன உயிர்

Lincoln

EC takes up misuse of LG funds for election work of political parties

Lincoln

பொலிஸ் சுற்றிவளைப்பு: தேடப்பட்டு வந்த 297 சந்தேகநபர்கள் கைது

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy