Sangathy
News

இன்று முதல் விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

Colombo (News 1st) கொழும்பு மாநகரசபை எல்லைப் பகுதிகள், கம்பஹா, களுத்துறை, கண்டி, இரத்தினபுரி, கேகாலை, குருணாகல் போன்ற பகுதிகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை நாளாந்தம் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை முன்னிட்டு, இன்று(12) முதல் 05 நாட்களுக்கு விசேட டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர், வைத்தியர் நளின் ஆரியரத்ன கூறியுள்ளார்.

தற்போது நிலவும் மழையுடனான வானிலையால், எதிர்வரும் நாட்களில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மாதத்தில் மாத்திரம் நாட்டில் 2300 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Related posts

Jaffna Tamil gets OBE

Lincoln

President requests the opposition to support the implementation of the IMF agreement

Lincoln

STF nets four with firearm for underworld killing

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy