Sangathy
News

Vat வரி திருத்தச் சட்டமூலம் நாளை(11) மீள சமர்ப்பிக்கப்படும் – ரஞ்சித் சியம்பலாபிட்டிய

Colombo (News 1st) வெட் வரி(Vat Tax) திருத்தச் சட்டமூலம் நாளை(11) மீண்டும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

நாளை அதனை பாராளுமன்றத்தில் நிறைவேற்றிக் கொள்ளவுள்ளதாக அவர் அறிக்கையொன்றினூடாக கூறியுள்ளார்.

குறித்த சட்டமூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன் பொருட்கள் தொடர்பான பட்டியல் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளார்.

குறித்த பொருட்கள் பட்டியலை கோரி எதிர்க்கட்சியினர் இன்று அநாவசியமான பிரச்சினைகளை தோற்றுவிப்பதற்கு முயற்சித்ததாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

வெட் வரி திருத்தச் சட்டமூலம் இன்று(10) காலை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

எனினும், கோரமின்மையால் இது தொடர்பான விவாதம் இடைநடுவே நிறுத்தப்பட்டதுடன் பாராளுமன்ற சபை நடவடிக்கைகள் நாளை(11) காலை 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Related posts

700 ஆண்டுகள் பழமையான முட்டையில் மஞ்சள் கரு..!

Lincoln

WFP finds 32 percent of Lankan households are food insecure

Lincoln

District Leaders appointed for District 82, Toastmasters International for 2022 – 2023

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy