Sangathy
News

அமெரிக்க அதிபர் தேர்தல்: குடியரசுக் கட்சி வேட்பாளர் தெரிவில் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை

2024-ம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரை தெரிவு செய்யும் தேர்தல் நடைபெற்று வருகிறது. 

இதில் அயோவா (Iowa) மாகாணத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். 

தற்போதுள்ள அதிபரின் பதவிக்காலம் இவ்வாண்டுடன் நிறைவடைவதால், எதிர்வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. 

அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்கள் கட்சி உறுப்பினர்களின் ஆதரவைப் பெற வேண்டும். அதற்கு மாகாணங்கள் தோறும் வாக்குப்பதிவு நடைபெறும். பிரதானமாகவுள்ள இரண்டு கட்சிகள் சார்பிலும் நடக்கும் மாநாட்டில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் கட்சியின் அதிபர் வேட்பாளரை தேர்ந்தெடுப்பார்கள்.

அந்த வகையில், குடியரசு கட்சி சார்பில் அதிபர் வேட்பாளர் தேர்வு நடைபெற்று வருகிறது. முன்னாள் அதிபர் ட்ரம்ப், இந்திய வம்சாவளியை சோ்ந்தவரும், தெற்கு கரோலினா மாகாண முன்னாள் ஆளுநருமான நிக்கி ஹேலி, தொழிலதிபா் விவேக் ராமசாமி உள்ளிட்டோர் களத்தில் உள்ளனர். 

இதில் அயோவா மாகாண தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார் ட்ரம்ப்.

அயோவா தேர்தலில் 51.9 சதவீத வாக்குகளுடன் டொனால்ட் ட்ரம்ப் முன்னிலை வகிக்கிறார். ப்ளோரிடா ஆளுநர் ரான் டேசாண்டிஸ் 20.7 சதவீத வாக்குகளுடன் 2 ஆம் இடத்தில் இருக்கிறார். தெற்கு கரோலினா ஆளுநர் நிக்கி ஹேலி 19% வாக்குகளுடன் மூன்றாம் இடத்தில் உள்ளார். விவேக் ராமசாமி 7.7 சதவீத வாக்குகளும், அர்கான்ஸஸ் முன்னாள் ஆளுநர் அஸா ஹட்ஷின்சன் 0.2%  வாக்குகளும் பெற்றுள்ளனர்.

Related posts

நாட்டின் பல பகுதிகளில் 75 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகலாம் – வளிமண்டலவியல் திணைக்களம்

John David

பதவிய துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

Lincoln

Rt. Hon. Nagendrar Ladchumanarajah passed away

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy