Sangathy
Sports

சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான பிரிவில் திருநங்கையர் போட்டியிட தடை

Colombo (News 1st) சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் மகளிருக்கான பிரிவில் திருநங்கையர் போட்டியிடுவதை உலக தடகள சம்மேளனம் தடை செய்துள்ளது.

இம்மாதம் 31 ஆம் திகதியில் இருந்து இந்தத் தடை அமுலுக்கு வருவதாக உலக தடகள சம்மேளனத்தின் தலைவர் Lord Coe தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், மூன்றாம் பாலினத்தவர்களின் போட்டியிடக்கூடிய இயலுமை தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொள்வதற்காக செயற்குழு ஒன்றை ஸ்தாபிக்கவுள்ளதாகவும் Lord Coe குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய விதிகளின் படி, உலக தடகளப் போட்டிகளில் திருநங்கைகள் தங்கள் இரத்த டெஸ்டோஸ்டிரோனின் அளவை அதிகபட்சமாக 5nmol/L ஆகக் குறைக்க வேண்டும். மேலும், பெண்களுக்கான பிரிவில் அவர்கள் போட்டியிடுவதற்கு முன்பு 12 மாதங்களுக்கு இந்த வரம்பை தொடர்ந்து பேணியிருக்க வேண்டும்.

எனினும், தற்போதைய தடை பெண்கள் பிரிவை பாதுகாக்கவென மேலோட்டமான கொள்கையால் மேற்கொள்ளப்பட்டது எனவும், மூன்றாம் பாலினத்தவர்களை உள்வாங்குவதற்கான விடயங்கள் தொடர்பில் ஆராயப்படும் எனவும் Lord Coe கூறியுள்ளார்.

எவ்வாறாயினும், சர்வதேச போட்டிகளில் மூன்றாம் பாலின வீராங்கனைகள் யாரும் தற்போது இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

Related posts

Part of port land up for sale

Lincoln

ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்களை குவித்த சன்ரைசர்ஸ் : மும்பைக்கு 278 ரன்கள் இலக்கு..!

tharshi

University of Moratuwa win Inter University Chess Championships 2022

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy