வேன் – மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் 2 பெண்கள் பலி

Colombo (News 1st) யாழ்ப்பாணம் – அல்லைப்பிட்டி பகுதியில் நேற்று(01) மாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 2 பெண்கள் உயிரிழந்துள்ளனர்.

சிறிய ரக வேனொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த 2 பெண்களே உயிரிழந்துள்ளனர்.

ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்ததுடன், மற்றைய பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதை அடுத்து உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 மற்றும் 31 வயதான இருவரே விபத்தில் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்துடன் தொடர்புடைய வேன் சாரதியும் காயமடைந்துள்ள நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வேன் சாரதியின் கவனயீனமே விபத்திற்கான காரணம் என பொலிஸார் கூறினர்.

சம்பவம் தொடர்பாக ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles