Sangathy
Health

கருப்பை வாய் புற்றுநோய் : ஹெச்.பி.வி. தடுப்பூசியை யாரெல்லாம் போட வேண்டும்..!

உலகெங்கிலும் உள்ள பெண்களில், கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் நான்காவது பொதுவான புற்றுநோயாகும். இந்த நோயால், ஒவ்வொரு ஆண்டும் 3,00,000-க்கும் அதிகமானோர் இறக்கிறார்கள். ஹெச்.பி.வி. தடுப்பூசியில் மூலம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைக்க முடியும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

ஹெச்பிவி என்றால் என்ன?

ஹெச்பிவி என்பது மிகவும் பொதுவான வைரஸ்களின் குழுப்பெயர். இங்கு 100-க்கும் மேற்பட்ட வெவ்வேறு வகையான ஹெச்.பி.வி. வைரஸ்கள் உள்ளன. இவற்றால் ஏற்படும் நோய்த்தொற்றுகள் பொதுவாக எந்த அறிகுறிகளையும் வெளிப்படுத்துவதில்லை. சில வைரஸ்கள் நம் உடலில் மருக்களை ஏற்படுத்தும். அவை நம் கை, கால், பிறப்புறுப்பு அல்லது வாயில் தோன்றலாம்.

இருப்பினும், பெரும்பாலான மக்கள், தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை உணர மாட்டார்கள். அவர்களின் உடல்கள் சிகிச்சையின்றியே வைரஸை அகற்றும். ஆனால் அதிக ஆபத்துள்ள ஹெச்.பி.வி. வைரஸ் வகைகள், அசாதாரண திசு வளர்ச்சியை ஏற்படுத்தும். இவை புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும்.

ஹெச்.பி.வி. தடுப்பூசி எவ்வாறு பாதுகாக்கிறது?

ஹெச்.பி.வி. தடுப்பூசி ஒன்பது வகையான ஹெச்பிவி வைரஸ்களின் தொற்றில் இருந்து பாதுகாக்கிறது. குறைந்தது பத்து ஆண்டுகளுக்கு ஹெச்.பி.வி. தொற்றுக்கு எதிராக தடுப்பூசி பாதுகாக்கும் என ஆய்வுகள் காட்டுகின்றன. ஆனால், அதற்கும் மேல் நீண்ட காலம் பாதுகாக்கும் என நிபுணர்கள் கூறுகிறார்கள். இது கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின்பாதிப்பை கிட்டத்தட்ட 90 சதவீதம் குறைப்பதாக ஆராய்ச்சி கூறுகிறது.

ஹெச்.பி.வி. தடுப்பூசி யாருக்கு?

ஹெச்.பி.வி. தடுப்பூசியை பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஹெச்.பி.வி. பாதிப்பிற்கு முன் எடுத்துக் கொண்டால் அது சிறப்பாக செயல்படும். ஏனெனில், தடுப்பூசிகளால் தற்காத்துக்கொள்ள மட்டுமே முடியும், அவை உடலில் பாதிப்பை ஏற்படுத்திய பின்னர், அவற்றை வெளியேற்ற முடியாது.

தடுப்பூசி ஒன்று அல்லது இரண்டு டோஸ்களாக கொடுக்கப்படலாம் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி உள்ளவர்கள் இரண்டு அல்லது மூன்று டோஸ்களைப் பெற வேண்டும்.

யாருக்கு ஹெச்பிவி ஏற்படும்?

ஹெச்.பி.வி. எளிதில் பரவக் கூடியது. இது தோல் மூலமாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவுகிறது. பெரும்பாலான மக்கள் தங்களின் 25 வயதிற்குள்ளாகவே ஹெச்.பி.வி. பாதிப்புக்கு உள்ளாகின்றனர். பெரும்பாலான நேரங்களில் மக்கள் 18 மாதங்கள் முதல் இரண்டு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகின்றனர்.

இது பாலியல் ரீதியாக பரவும் நோய் அல்ல. இது பாலியல் திரவங்களாலும் பரவுவதில்லை. ஆனால், இது தொடுதல் உள்ளிட்ட பாலியல் தொடர்புகளின் போது இது அடிக்கடி பரவுகிறது.

Related posts

ஒற்றைத் தலைவலி ஏற்படக் காரணம்..!

Lincoln

Brazil tops 2 million coronavirus cases, with 76,000 dead

Lincoln

Women should make their figure more

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy