யாழ். புங்குடுதீவு 10ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 12ம் வட்டாரம், பிரான்ஸ் Rosny-sous-Bois ஆகிய இடங்களை வதிவிடமாகவும்கொண்டிருந்த கந்தையா தியாகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல் எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
குடும்பத்தின் குல விளக்காய் பாசத்தின் பிறப்பிடமாய்
பண்பின் உறைவிடமாய் வாழ்வின் வழிகாட்டியாய்
வாழ்ந்த எம் குள விளக்கே!
உங்களையே உலகமென உறுதியாய் நாமிருக்க
ஏன் விண்ணுலகம் நிரந்தரமாய் விரைந்தீரோ?
நீங்கள் என்னைவிட்டு நீண்டதூரம் சென்றாலும்
உன் ஆசைமுகம் என் நெஞ்சில் நிலைத்திருக்கும்
உங்களோடு வாழ்ந்த நாட்கள் திரும்பி வராதா என்று
எண்ணித் துடிக்கிறேன்.
ஓராயிரம் வருடங்கள் ஆனாலும்
உங்கள் நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
You must be logged in to post a comment.