Sangathy
Cinema World

‘தி கோட் லைப்’ : மனம் குளிர்ந்து பாராட்டிய கமல்..!

மலையாள முன்னணி நடிகர் பிருத்வி ராஜ் கதாநாயகனாக நடித்த புதிய படம் ‘தி கோட் லைப்’ ( ஆடுஜீவிதம்). இப்படத்தில் கதாநாயகியாக அமலாபால் , வினீத், ஜிம்மி ஜீன் லூயிஸ் உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். தேசிய விருது வென்ற இயக்குநர் பிளெஸ்ஸி இந்த படத்தை இயக்கி உள்ளார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த 6 வருடமாக நடந்து வந்தது. இந்த படத்திற்காக பிருத்விராஜ் 31 கிலோ எடை குறைத்தார்.

படப்பிடிப்புக்காக சவுதி அரேபியாவில் இருந்து 250 செம்மறி ஆடுகள் மற்றும் 20 ஒட்டகங்கள் வாங்கப்பட்டன. இந்த படத்துக்கு பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர் ரஹ்மான் இசை அமைத்து உள்ளார்.

இந்நிலையில் இப்படம் நாளை ( 28- ந் தேதி) தியேட்டர்களில் ரிலீஸ் செய்யப்படுகிறது. தமிழ், இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் இப்படம் ஒரே நேரத்தில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில் இப்படத்தின் பிரீமியர் ஷோ’ பிரபலங்களுக்கு போட்டு காட்டப்பட்டது. இதில் நடிகர் கமல்ஹாசன், பிரபல இயக்குனர் மணி ரத்னம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு படம் பார்த்தனர்.

அதன் பின் நடிகர் கமல் படம் பற்றி கூறியதாவது ;-

”தி கோட் லைப்’ படம் பார்த்து மனம்குளிர்ந்து உள்ளேன். இந்த படம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்த படம் வெகுசிறப்பாக அமைந்து உள்ளது. இதில் நடித்த நடிகர்கள் மிகுந்த ‘சிரமம்’ எடுத்து நடித்து உள்ளனர்.

இப்படத்தில் நடித்துள்ள நடிகர்,நடிகைகளுக்கு எனது மனதார பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். தொழில்நுட்ப குழுவினரின் உழைப்பும் பாராட்டுக்குரியது. இந்த படம் மக்களிடம் பெரும் வரவேற்பை பெறும். இந்த படம் கண்டிப்பாக விருது பெறும்” என்றார்.

Related posts

கீதா கோவிந்தம் இயக்குனரின் அடுத்த படைப்பு..!

tharshi

நடிகர் அஜித் மருத்துவமனையில் அனுமதி..!

Lincoln

25 ஆண்டுகளுக்கு பிறகு பிரபு தேவா- ஏ.ஆர்.ரகுமான் இணையும் புதிய படம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy