சுந்தர்பிச்சை தலைமையிலான கூகுள் நிறுவனத்தில் சமீபத்தில் பைதான் குழுவைச் சேர்ந்த அனைவரையும் அதிக சம்பளம் கொடுக்க தயாராக இல்லை என்ற காரணத்தை சொல்லி நிறுவனம் பணிநீக்கம் செய்தது.
உலகின் முன்னணி ஐடி நிறுவனமான கூகுள் நிறுவனத்தின் பைதான் குழுவைச் சேர்ந்த அனைத்து ஊழியர்களையும், அதிக சம்பளம் கொடுக்க முடியாது என்ற காரணத்தால் நிறுவனம் அந்தக்குழுவையே பணிநீக்கம் செய்துள்ளதாக நேற்று செய்தி வெளியானது. அதனைத்தொடர்ந்து அந்த காலியிடங்களுக்கு குறைந்த சம்பளத்தில் ஆட்களை அமர வைக்க நிறுவனம் முடிவெடுத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து எக்ஸ் பயனாளர் ஒருவர் ஒரு ஸ்கிரீன் ஷாட்டையும் வெளியிட்டுள்ளார். அதில் கூகுள் ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது வெளியாகி உள்ளது. அதில் Linkedin பயனாளர் ஒருவர் தனது பணிநீக்கம் குறித்து பெரும் வேதவையுடன் போஸ்ட் செய்திருந்ததை காட்டியுள்ளது.
அதில் இரண்டு வருடங்களாக கூகுளில் இருந்ததாகக் கூறும் கூகுள் சாஃப்ட்வேர் இன்ஜினியரான மாட் ஹு என்பவர் “நேற்றிரவு என் வாழ்வில் மிக நீண்ட இரவாக இருந்தது. நான் நேற்று வீட்டில் இருந்து வேலை செய்தேன், நான் என் காதலியுடன் ஒரு பெரிய இரவு உணவை சமைத்தேன், அதன் பிறகு டிவியில் ரியாலிட்டி ஷோவைப் பார்த்தேன். இன்றிரவு நேர்காணலுக்குத் தயாராக வேண்டும் என்று என் தோழியிடம் சொன்னேன்” “இவ்வாறு நான் என் வாழ்க்கையில் மிக நீண்ட ஐந்து நிமிடங்கள் அதுவும் ஒன்று. அதில் கூகுளிடமிருந்து உங்கள் பணிக்கான கடிதம் என்ற பெயரில் மின்னஞ்சல் இருந்தது. அதில் உங்கள் வேலைக்கான கடிகாரம் முடிந்துவிட்டது எனக் கூறியிருந்தனர்.
அவர் மட்டுமல்ல, அவரது மெயிலில் மேலாளரும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார் என்பதை ஹு அறிந்தார். “நான் இந்த மின்னஞ்சலை எழுதும்போது என் கைகள் நடுங்குகின்றன” என்று அவர் எழுதினார் , படிக்கும் போது என் கைகளும் நடுங்கின. அவர் கிட்டத்தட்ட 13 ஆண்டுகளாக கூகுளில் இருக்கிறார், அவர் எங்கள் குழுவை முதல் வரி கோடிங்கிலிருந்து உருவாக்கினார், ஆனால் இப்போது அவர் தனது குழந்தைக்கு குட்பை சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
இப்படி கூகுள் பணிநீக்கங்களால் பலபேர் மன உளைச்சலுக்கும், அதை ஏற்க முடியாத சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதைப்படிக்கும்பொழுது இதுக்கு இல்லையா சார் ஒரு எண்டு கார்டு என்றுதான் தோன்றுகிறது.