தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் 1,700 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொட்டகலையில் இடம்பெற்ற மே தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலும் வௌியிடப்பட்டுள்ளது.