Sangathy
Srilanka

நோர்வேயின் தூதுவருடன் எதிர்க்கட்சித் தலைவர் சந்திப்பு..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இந்நாட்டுக்கான நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கும் இடையில் நேற்று (02) விசேட சந்திப்பு ஒன்று இடம்பெற்றது.

இதன்போது இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் இரு தரப்பினரும் நீண்ட நேரம் கலந்துரையாடியதுடன், இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடி குறித்தும் அதிலிருந்து மீள்வது குறித்தும் நோர்வே தூதுவருக்கு தெரியப்படுத்தியதுடன், ஐக்கிய மக்கள் சக்தியின் திட்டங்கள் குறித்தும் விளக்கமளிக்கப்பட்டது.

இந்த ஆண்டு இந்நாட்டின் அரசியலில் ஒரு முக்கியமான ஆண்டு என்றும், முக்கியமான தேர்தல் நடைபெறும் என்றும் அவருக்குத் தெரிவிக்கப்பட்டது. அத்துடன், தற்போதைய படுமோசமான ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, மக்கள் சார் அரசாங்கம் தாபிக்கப்பட்டதன் பின்னர், நாட்டை மீண்டும் வழமை நிலைமைக்குக் கொண்டுவர ஐக்கி்ய மக்கள் சக்தி எவ்வாறு திட்டமிட்டுள்ளது என்பது குறித்தும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

இச்சந்திப்பில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுடன் பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா, எரான் விக்ரமரத்ன மற்றும் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.

Related posts

மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் உயிரிழப்பு : நால்வர் காயம்..!

Lincoln

ரஷ்ய போரில் பங்கெடுத்திருக்கும் இலங்கையர்கள் தொடர்பில் ஆராய விசேட குழு..!

tharshi

கொழும்பில் தமிழ் மக்களை இலக்கு வைக்கும் பொலிஸார் – சபையில் மனோ எம்.பி. குற்றச்சாட்டு

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy