Sangathy
Sports

டி20 உலகக் கோப்பை 2024: ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வரும் ரோஹித்..!

ஹர்திக் பாண்டியாவின் கிரிக்கெட் வாழ்க்கையை, முடிவுக்கு கொண்டு வரும் அளவுக்கு ரோஹித் வேலை வாங்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

டி20 உலகக் கோப்பை 2024 தொடருக்கான இந்திய அணி, சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.

ஐபிஎல் 17ஆவது சீசன் மே 26ஆம் தேதி நிறைவு பெறும். இதனைத் தொடர்ந்து ஜூன் 1 முதல் டி20 உலகக் கோப்பை 2024 தொடர் துவங்கும். லீக் ஆட்டங்கள் அமெரிக்காவிலும், சூப்பர் 8 போட்டிகள், நாக்அவுட் போட்டிகள் மேற்கிந்தியத் தீவுகளிலும் நடக்க உள்ளது.

தற்போது, பிட்ச்கள் குறித்த அறிக்கையை, பிசிசிஐ நிர்வாகிகள் அஜித் அகார்கரிடம் சமர்பித்துள்ளனர். அதில், போட்டிகள் நடைபெறும் பிட்ச்களில், பெரும்பாலானவை, மிகவும் ஸ்லோ விக்கெட்டாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அணித் தேர்வு:

இதனால், ஸ்லோ விக்கெட்டில் சிறப்பாக செயல்படக் கூடிய பேட்டர்கள், பௌலர்களை தேர்வு செய்ய பிசிசிஐ முடிவு செய்தது. ஸ்லோ விக்கெட்டில் கோலி அபாரமாக ஆடக் கூடியவர் என்பதால், அவர் நிச்சயம் விளையாடுவார் எனக் கூறப்பட்டது.

15 வீரர்கள் இடம்:

இந்திய அணியில், 15 வீரர்களின் இடம் உறுதியாகிவிட்டதாக நேற்று தகவல் வெளியாகி இருந்தது . ரோஹித் சர்மா, விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகிய பேட்டர்களின் இடங்கள் உறுதியாகிவிட்டதாக நேற்று கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார். கேப்டனாக ரோஹித் சர்மா, துணைக் கேப்டனாக ஹர்திக் பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

பட்டியல் இதுதான்:

ரோஹித் சர்மா (கேப்டன்), யாஷஸ்வி ஜெய்ஷ்வால், கோலி, சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த், சாம்சன், ஹர்திக் பாண்டியா, ஷிவம் துபே, ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஜ்வேந்திர சஹல், அர்ஷ்தீப் சிங், பும்ரா, முகமது சிராஜ்.

ஹர்திக்கிற்கு ஆப்பு:

ஹர்திக் பாண்டியாவை, துணைக் கேப்டனாக நியமித்தற்கு பல காரணங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆம், 4 ஓவர்களை வீச முடியும் என அவர் ஒப்புக்கொண்டதால்தான், துணைக் கேப்டன் பதவியை கொடுத்தார்களாம். இதுவே ஹர்திக் பாண்டியாவுக்கு பெரிய பிரச்சினையாக மாற வாய்ப்புள்ளது.

ஒரு மாதத்தில் போட்டிகள்:

டி20 உலகக் கோப்பை தொடரானவது, ஒரே மாதத்தில் நடந்து முடிய உள்ளது. இந்த ஒரு மாதத்தில், ஹர்திக் தொடர்ந்து 4 ஓவர்களை வீசினால், அவருக்கு மீண்டும் காயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த காரணத்தினால்தான், அவர் மும்பை அணிக்கு அவ்வபோது மட்டுமே பந்துவீசி வருகிறார். இது தெரிந்தும், அவர் 4 ஓவர்களை வீச வேண்டும் என ரோஹித் உத்தரவாதம் கேட்டு, அதன்பிறகுதான் துணைக் கேப்டனாக நியிமக்கப்பட்டார் என தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

 

Related posts

Cristiano Ronaldo’s debut vs. PSG, Messi sees over 2 million online ticket requests – sources

Lincoln

SL chess players miss World Junior Chess event after Italian Embassy snub them

Lincoln

Hosts Qatar thrill fans with winning start at the AFC Asian Cup 2023

John David

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy