Sangathy
World Politics

மயோனைஸ் சாப்பிட்டு 75 பேர் மருத்துவமனையில் அனுமதி : இரு நாடுகளில் தடை..!

மயோனைஸ் எனப்படும் உணவுப் பொருள் தற்போது மக்கள் மத்தியில் மிகவும் பிரபலம் அடைந்திருக்கிறது. சைடு டிஷ்ஷாக இருக்கும் மயோனைஸ் தற்போது மெயின் டிஷ்ஷாக மக்களால் உண்ணப்படுகிறது. இந்த மயோனைஸ் சாப்பிடுவதால் எக்கச்சக்கமான உடல் கோளாறுகள் ஏற்படுகிறது. இது குறித்து பல ஆய்வுகள் தெரிவித்து இருக்கிறது. ஆனாலும், மயோனைஸ் மோகம் குறையாமல் கூடிவருகிறது.

அந்த வகையில் சவுதி அரேபியாவில் கடந்து சில தினங்களுக்கு முன்பு உணவகத்தில் வைக்கப்பட்டு இருந்த மயோனைஸ்ஸில் உயிரைக்கொல்லும் விஷத்தன்மை கொண்ட பாக்டீரியா கண்டறியப்பட்டது. அதனை தொடர்ந்து அந்த குறிப்பிட்ட பிராண்டு மயோனைஸ்க்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்தது. மேலும் இந்த குறிப்பிட்ட பிராண்டானது அபுதாபி சந்தையில் விற்கப்படுவதாக சில குற்றச்சாட்டு எழுந்தது.

குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி அபுதாபி அரசு இந்த குறிபிட்ட பிராண்ட் மயோனைஸ் குறித்த விளக்கத்தை கொடுத்திருக்கிறது. அதில் குறிப்பிட்ட அந்த பிராண்ட் மயோனைஸ் அபுதாபி சந்தையில் விற்கப்படுவதில்லை என்றும் நகரத்தில் இருக்கும் விற்பனை நிலையங்களுக்குள் நுழையாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார்கள்.

மேலும் பாதுகாப்பற்ற மற்றும் ஆரோக்கியமற்ற தயாரிப்புகளுடன் எமிரேட்டின் சந்தைகளில் இருக்கும் இம்மாதிரியான உணவுப்பொருளை தடுக்க தேவையான நடவடிக்கை எடுத்துவருவதாகவும் அந்நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையம் நுகர்வோருக்கு உறுதியளித்து இருக்கிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியாத் பகுதியில் ஹம்பர்கினி உணவகத்தில் பரிமாறபட்ட இந்த மயோனைஸ் பலரது உடலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த வகையில் ஒருவர் உயிரிழக்க 75 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனை தொடர்ந்து சவுதி அரேபியா முழுவதும் குறிபிட்ட பான்டும் மயோனைஸ் பிராண்ட் விநியோகம் நிறுத்தபட்டது.

சவுதியில் இருக்கும் உணவு மற்றும் மருந்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், இந்த உணவகத்தில் வழங்கப்பட்ட பான்டும் மயோனைஸ் மாதிரியில் பொட்டுரிலிம் பாதிப்பை ஏற்படுத்தும் க்ளோஸ்ட்ரிடியம் போட்யூடிலினம் பாக்டீரியா இருப்பது தெரியவந்தது. இதன் காரணமாகவே இந்த மயோனைஸ் உட்கொண்ட அனைவருக்கும் உடலில் பாதிப்பை ஏற்பட்டதாக தெரிவித்திருக்கிறது. சவுதி அரேபியாவில் இந்த பாதிப்பு ஏற்பட்டதால் அந்த குறிப்பிட்ட பிராண்டுக்கு அபுதாபியிலும் தடைவிதித்து உத்தரவிடபட்டிருக்கிறது.

Related posts

Despicable Rightwing  Philosophy propagated by Daily Express news paper

Lincoln

நடுவானில் திருமண சடங்கு ஒத்திகை..!

tharshi

இந்தியாக்கிட்ட வம்பு பண்ணினா வால ஒட்ட வெட்டிவிடுவேன் : சீனாவை அலறவிட்ட ஜோ பைடன்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy