Sangathy
World Politics

இந்தியாக்கிட்ட வம்பு பண்ணினா வால ஒட்ட வெட்டிவிடுவேன் : சீனாவை அலறவிட்ட ஜோ பைடன்..!

இந்தியா உட்பட தனது கூட்டாளி நாடுகளுடன் சீனா மோதலில் ஈடுபட்டால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

இந்தியாவுடன் மல்லுக்கட்டி வருவது போலவே அதன் நட்பு நாடுகளுடனும் சீன அரசு மல்லுக்கட்டி வருகிறது. குறிப்பாக அமெரிக்காவின் எதிரி நாடுகளுடன் சேர்ந்து கொண்டு அந்நாட்டுக்கும் குடைச்சல் கொடுத்து வருகிறது. மேலும் அமெரிக்காவின் நட்பு பாராட்டி வரும், ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகளுடனும் மோதலை கடைப்பிடித்து வருகிறது சீனா.

இந்நிலையில் தனுது ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையில் சீனாவை கடுமையாக எச்சரித்துள்ளார் அதிபர் ஜோ பைடன். அமெரிக்க நாடாளுமன்றத்தில் ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் அந்நாட்டு அதிபர் ஸ்டேட் ஆஃப் யூனியன் உரையை வாசிப்பது வழக்கம். அந்த வகையில் ஜோ பைடன் தனது உரையை வாசித்தார்.

அதில் சீனாவைக் கடுமையாக தாக்கி பேசினார் அதிபர் ஜோ பைடன். சீனாவுடன் அமெரிக்கா போட்டியை விரும்பினாலும் எந்த ஒரு மோதலையும் விரும்பவில்லை என்றும் ஜோ பைடன் தெரிவித்தார். இந்த 21ஆம் நூற்றாண்டில் சீனா கடுமையான போட்டியை கொடுத்தாலும் அமெரிக்கா வலுவான நாடாகவே உள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் கூறினார்.

மேலும் சீனாவின் நியாயமற்ற பொருளாதார நடைமுறைக்கு எதிராக அமெரிக்கா நிற்கிறது என்றும், தைவான் கடற் பகுதி முழுவதும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மை ஏற்படுத்த அமெரிக்கா துணை நிற்கும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். மேலும், தங்களின் நட்பு நாடுகளான இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகளுடனான உறவுக்கு புத்தூயிர் அளிக்கப்படும் என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.

சீனா வளர்ச்சி அடைந்து வருவதாகவும் அமெரிக்கா வீழ்ச்சியை சந்தித்து வருவதாகவும் கூறப்படுவதில் உண்மை இல்லை என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அமெரிக்கா புதிய உச்சத்தைத் தொடும் வகையில் வளர்ச்சி அடைந்து வருவதாகவும், உலகில் சிறந்த பொருளாதார நாடாக அமெரிக்கா உள்ளது என்றும் அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

அண்டை நாடான சீனா, இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் பல பகுதிகளை சொந்தம் கொண்டாடி வருகிறது. தனது உளவு கப்பல்கள் மூலம் இலங்கை மற்றும் மாலத்தீவு பகுதிகளில் இருந்து இந்தியாவையும் நேட்டம் விட்டு வருகிறது. அதோடு இந்தியாவுக்கு எதிராக மாலவுத்தீவு மற்றும் பாகிஸ்தானையும் கொம்பு சீவி விட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts

3-வது முறையாக நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றார் நேபாள பிரதமர்..!

Lincoln

3-வது முறையாக விண்வெளி பயணிக்கும் சுனிதா வில்லியம்ஸ்..!

tharshi

ஜப்பானில் மீண்டும் நிலநடுக்கம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy