பீகாரின் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய அமித் ஷா, “இந்த நாட்டில் கடந்த 30 ஆண்டுகளாக ஸ்திரமற்ற அரசாங்கங்கள் இருந்தன. ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் நாடு வலுவான தலைமையைப் பெற்றுள்ளது, ஸ்திரத்தன்மையைப் பெற்றுள்ளது. அரசியல் ஸ்திரத்தன்மை மட்டுமல்ல, கொள்கைகளிலும் வளர்ச்சித் திட்டங்களிலும் ஸ்திரத்தன்மை பெற்றுள்ளது.
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால் ஓராண்டுக்கு ஸ்டாலின் பிரதமராக இருப்பார். அதேபோல மம்தா, சரத் பவாரும் தலா ஓராண்டுக்கு பிரதமராக இருப்பார்கள். ஏதேனும் ஒரு ஆண்டு மிச்சமிருந்தால் ராகுல் பிரதமராவார்” என்று பேசியுள்ளார்.
இதற்கு முன்னதாக, “எதிர்க்கட்சியினர் பிரதமர் பதவியை ஏலம் விடுவதில் மும்முரமாக உள்ளனர். இந்தியா கூட்டணி கட்சியினர் ஒரு வருடத்திற்கு ஒரு பிரதமர் என்ற பார்முலாவை உருவாக்க திட்டமிட்டு வருகின்றனர்” என்று பிரதமர் மோடி பேசியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.