Sangathy
Cinema World

GOAT படத்தின் அப்டேட் கொடுத்த இயக்குனர் வெங்கட் பிரபு..!

நடிகர் விஜயின் 68-வது படமான ‘கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்ஸ்’ (G.O.A.T.) படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர்கள் ஜெயராம், பிரபுதேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி ஆகியோர் நடித்து வருகின்றனர்.

ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘விசில் போடு’ வெளியான நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு சினிமாவில் 17 ஆண்டுகள் நிறைவு கொண்டாட்ட நிகழ்ச்சியில் 2 -வது சிங்கிள் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22-ஆம் திகதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ஆம் திகதி இப்படம் தியேட்டர்களில் ‘ரிலீஸ்’ செய்யப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

இதனால் இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு அமெரிக்காவில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இதற்காக நடிகர் விஜய் வெளிநாடுக்கு செல்ல சென்னை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், GOAT படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு தனது எக்ஸ் தள பக்கத்தில், VFX பணிகள் நிறைவடைந்துவிட்டதாக குறிப்பிட்டு விஜய்யின் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு, அதன் அவுட் புட்டை காண ஆவலோடு இருப்பதாக பதிவிட்டுள்ளார்.

இப்படத்தின் VFX பணிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் நடிகர் விஜய், இயக்குனர் வெங்கட் பிரபு ஆகியோர் அமெரிக்காவில் தங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆரவுக்கு காஸ்ட்லி கிஃப்ட் பரிசளித்த அஜித்..!

tharshi

சூர்யா படத்தில் இணைந்த விஜய் பட நாயகி : சூர்யா44 அப்டேட்..!

tharshi

உலக சினிமாவில் முதல் முறை : இரு நாய்கள் மட்டுமே நடித்த படம்..!

tharshi

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy