Sangathy
India

பிரதமர் மோடிக்கு உலகத் தலைவர்கள் வாழ்த்து..!

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டணி 296 இடங்களை கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. இதில் பா.ஜனதா மட்டும் 240 இடங்களை கைப்பற்றியுள்ளது.

வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட பிரதமர் மோடி, முதலில் சற்று பின்னடைவை சந்தித்தாலும் 1½ லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா அணி 296 இடங்களில் வெற்றி பெற்றதையடுத்து மத்தியில் பா.ஜனதா கூட்டணி ஆட்சி அமைய உள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடிக்கு உலகத்தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு அண்டை நாடுகளான மொரீஷியஸ் மற்றும் பூடான் தலைவர்கள் பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே மற்றும் நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு ஆகியோர் பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தனது எக்ஸ் தளத்தில்,

பாரதிய ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு என் அன்பான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடியின் தலைமையில் முன்னேற்றம் மற்றும் செழிப்பு ஆகியவற்றில் நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு வழி வகுத்தது.

நெருங்கிய அண்டை நாடான இலங்கை இந்தியாவுடனான கூட்டுறவை மேலும் வலுப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹால் பிரசந்தா தனது எக்ஸ் தளத்தில்,

பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து 3-வது முறையாக பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் தேர்தல் வெற்றிக்கு பிரதமர் மோடிக்கு வாழ்த்துகள்.

இந்திய மக்களின் உற்சாகமான பங்கேற்புடன் உலகின் மிகப்பெரிய ஜனநாயக பயிற்சியை வெற்றிகரமாக முடித்ததைக் குறிப்பிடுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம் என்று தெரிவித்துள்ளார்.

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி தனது எக்ஸ் தளத்தில்,

இத்தாலிக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவை வலுப்படுத்த இந்திய அரசாங்கத்துடன் நெருக்கமாக பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அவர் வெளிப்படுத்தி உள்ளார்.

வாழ்த்து தெரிவித்துள்ள உலகத்தலைவர்களுக்கு பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

Related posts

பள்ளி வாகனத்தில் திடீர் தீ : 17 மாணவர்கள் உயிர் தப்பினர்..!

tharshi

அகதி முகாமில் பிறந்தவர்களுக்கு குடியுரிமை : சென்னை உயர் நீதிமன்றம் விசேட உத்தரவு..!

Lincoln

இந்திய ஹோட்டல்களில் தீப்பரவல்..!

Lincoln

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy