அமெரிக்கா முன்வைத்த புதிய போர் நிறுத்த ஒப்பந்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்

புதிய காஸா போர் நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளின் விடுவிப்பு ஒப்பந்தத்திற்கான அமெரிக்காவின் சமீபத்திய திட்டத்தைத் தாம் நிராகரிப்பதாக ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான அமெரிக்காவின் விசேட தூதுவர் ஸ்டீவ் விட்கோப்பின் திட்டத்தில் இஸ்ரேல் “கையெழுத்திட்டுள்ளதாகவும்” ஹமாஸிடமிருந்து கிடைக்கப்பெறும் பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் வெள்ளை மாளிகை நேற்று(29) தெரிவித்தது.

60 நாள் போர் நிறுத்தம் மற்றும் இஸ்ரேலிய சிறைகளில் உள்ள பலஸ்தீன கைதிகளை விடுவிப்பதற்கு ஈடாக ஹமாஸ் இரண்டு கட்டங்களாக 10 பணயக்கைதிகளையும் 18 இறந்த பணயக்கைதிகளின் உடல்களையும் ஒப்படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

எனினும் போரை முடிவுக்குக் கொண்டுவருவது உள்ளிட்ட முக்கிய கோரிக்கைகளை இந்த திட்டம் பூர்த்தி செய்யவில்லை என ஹமாஸ் அமைப்பின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியுள்ளதாக பி.பி.சி செய்தி வெளியிட்டுள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles