பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தை நெருங்கிய மர்மப் பொருளால் பரபரப்பு

இங்கிலாந்து நாட்டின் லண்டன் நகரில் உள்ள ஹீத்ரோ விமான நிலையத்தில் இருந்து அமெரிக்காவின் நியூயோர்க் நகர் நோக்கி பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தின் போயிங் 777 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.

இதன்போது, 6 ஆயிரம் அடி உயரத்தில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது, பளபளப்பான மர்ம பொருள் ஒன்று விமானத்தில் மோத வந்ததாக கூறப்பட்டுள்ளது.

விமானத்தின் வலது புற இறக்கையின் அருகே, 50 அடி உயரத்திற்கு மேலே, வெள்ளி போன்ற நிறத்தில் பளபளக்கும் உலோகம் ஒன்று மோதுவது போன்று நெருங்கி வந்து பின்னர் கடந்து சென்றுள்ளது.

இதனை விமானி கவனித்து உள்ளார். எனினும், அதனால் பாதிப்பு ஏதும் நேரிடாத சூழலில் மற்றும் நேரமும் இல்லாத நிலையில், தொடர்ந்து இயக்கி சென்றுள்ளார்.

8 மணிநேர பயணத்திற்கு பின்னர் விமானம் பாதிப்பு எதுவுமின்றி அமெரிக்காவை சென்றடைந்தது. எனினும், இதுபற்றி விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் தெரிவித்துள்ளார்.

 

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles