யாழ். பல்கலைக்கழக கலைப்பீட பீடாதிபதியாக புவியல்துறைத் தலைவர் பிரதீபராஜா தெரிவு!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தின் புதிய பீடாதிபதியாக புவியியற்றுறை பேராசிரியர் நாகமுத்து பிரதீபராஜா இன்று (20) தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஏற்கனவே பதவியில் இருந்த கலைப்பீட பீடாதிபதியான ரகுமாராமின் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் புதிய பீடாதிபதி தெரிவுக்கான வாக்கெடுப்பு இன்று இடம்பெற்றது.

இந்நிலையில் அதிக வாக்குகளை பெற்றுக்கொண்டவர் என்ற அடிப்படையில் நாகமுத்து பிரதீபராஜா கலைப்பீட பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இவர் கடந்த காலங்களில் வானியல் ஆய்வுகளை துல்லியமாக கணித்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு தனியிடம் பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles