இலங்கையின் பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருந்த ஈரானின் 236 கடற்படைனர் மற்றும் மாலுமிகள் நேற்று செவ்வாய்க்கிழமை தமது நாட்டுக்குதம் திரும்பினர். இந்தத் தகவலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் அருண ஜயசேகர உறுதிப்படுத்தியுள்ளார்.
கடந்த மார்ச் 4ஆம் திகதி ஐ. ஆர். ஐ. எஸ். டினா என்ற கப்பல் இலங்கை கடற்பரப்புக்கு அருகே அமெரிக்க நீர்மூழ்கி கப்பலால் தாக்கப்பட்டது. இந்தத் தாக்குதலில் 87 பேர் உயிரிழந்தனர். இதேநேரம், அந்தக் கப்பலிலிருந்த 32 கடற்படையினரும் 204 மாலுமிகளும் இலங்கை கடற்படையால் காப்பாற்றப்பட்டனர். இவர்களில் பலர் காயமடைந்திருந்த நிலையில் அவர்களுக்கு சிகிச்சையளிக்கப்பட்டது. அத்துடன், அவர்கள் அரச பாதுகாப்பில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில், அவர்கள் அனைவரும் மிராஜ் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ஈரான் -09 என்ற விசேட விமானம் மூலமாக நேற்றைய தினம் தமது நாட்டுக்கு திரும்பினர்.
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு அருகிலுள்ள இலங்கை விமானப் படைத் தளத்திலிருந்தே இவர்கள் நாடு திரும்பினர்.
இந்த நடவடிக்கைஇ சர்வதேச மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
