அமரர் புஸ்பவதி பரமலிங்கம்

மண்ணில்20 OCT 1949 – விண்ணில்16 APR 2024
Gnnam’s Rice mill
வயது 74
புங்குடுதீவு 7ம் வட்டாரம், Sri Lanka (பிறந்த இடம்) கிளிநொச்சி, Sri Lanka Brampton, Canada

யாழ். புங்குடுதீவு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி, கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட புஸ்பவதி பரமலிங்கம் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம்முன்னே வாழ்ந்த தெய்வம் மறைந்து
ஆண்டிரண்டு ஆனதம்மா!

பொன்னும் பொருளும் கொட்டிக் கொடுத்தாலும்
பெற்றவள் அன்பு போல் வருமா?
நம்மைப் பெற்றவளின் தாய்மடியைத் தருமா??

கருப்பைக்குள்ளிருந்து நாம் காலுதைத்த போது…!
விருப்புற்று எம்பாதம் முத்தமிட்ட தாயே!
உடலில் சுமந்து உயிரை பகிர்ந்து
உருவம் கொடுத்த உயிரே!

இரவெல்லாம் விளக்காக விழித்திருந்து
எமக்காய் உன் உறக்கம்
துறந்து மகிழ்ந்திருந்தாய் அம்மா…!

நீ இல்லாமல் அரண்மனையாய் இருந்தாலும்
அநாதையாய் தவிக்கின்றோம்…!
ஆயிரம் கடவுளின் வரமிருந்தாலும் தாயே
உந்தன் ஆசிர்வாதத்திற்கு ஈடாகுமா?

இம்மைக்கும் ஏழேழு பிறவிக்கும்
அன்போடு எமை ஆழ்வாய்!
என்றென்றும் எழிலோடு- எம்
நெஞ்சிலெ நீ வாழ்வாய்!

உங்கள் ஆத்மா சாந்திக்காகப்
பிரார்த்திக்கின்றோம்!

தகவல்: குடும்பத்தினர்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles