ஆபிரிக்க நாடுகளுக்கு நாளை (01) முதல் 2028 ஏப்ரல் 30 ஆம் திகதி வரை பூஜ்ஜிய வரிச் சலுகையை சீனா அறிவித்துள்ளது.
சுங்க வரிச் சலுகையின் கீழ் வரும் குறிப்பிட்ட பொருட்களுக்கு மே 01ஆம் திகதி முதல் இனி சுங்க வரி இல்லை.
இது ஆபிரிக்காவின் 53 நாடுகளுக்குப் பொருந்தும் என சீன வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளார்.
மேலும் ஆபிரிக்காவிலிருந்து சீனாவுக்கு விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்வதற்கான பசுமை வழித்தடத்தை மேம்படுத்தி சீனாவுக்கும் ஆபிரிக்காவுக்கும் இடையிலான வர்த்தகம் சீராக அதிகரிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
