2.5 மில்லியன்  மோசடி: 5 அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடைவிதிப்பு

இலங்கை திறைசேரியிலிருந்து 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி இணையவழிக் கொள்ளையர்களால் திருடப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாகஇ குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் உண்மைகளைச் சமர்ப்பித்துள்ளது.

இதன்படி விசாரணையின் முன்னேற்றத்தை ஆய்வு செய்த கொழும்பு கோட்டை நீதவான் இசுரு நெத்திகுமார குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் கோரிக்கையை ஏற்று ஐந்து அதிகாரிகளுக்கு வெளிநாடு செல்லத் தடை விதித்தார்.

அத்துடன் தற்போது கட்டாய விடுமுறையில் இருக்கும் அந்த ஐந்து அதிகாரிகளின் வங்கி கணக்குகளைச் சோதனையிடவும் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

அவுஸ்திரேலியாவுடனான கடன் மறுசீரமைப்புச் செயல்முறைக்குப் பிறகு ‘எக்ஸ்போர்ட் பினான்ஸ் அவுஸ்திரேலியா’ நிறுவனத்திற்குச் செலுத்தவேண்டிய கடன் தவணைப் பணம் இணையவழிக் கொள்ளையர்களின் கைகளுக்குச் சென்றுள்ளது.

அதிகாரபூர்வ மின்னஞ்சல் முகவரியான exportfinance.gov.au என்பதற்குப் பதிலாக, exportfinanceav.com என்ற பெயரில் போலி மின்னஞ்சல் முகவரியை உருவாக்கி இந்த மோசடி செய்யப்பட்டுள்ளது.

2025 ஒக்ரோபர் 28 அன்று நிறுவன மின்னஞ்சல் முகவரி மாற்றப்பட்டுள்ளதாக எச்சரித்த போதும்இ அந்த எச்சரிக்கையை மீறி நிதிப் பரிமாற்றம் நடந்துள்ளது.

வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் தரவு அமைப்பிலிருந்து சில தகவல்கள் அழிக்கப்பட்டுள்ளமை சோதனையில் தெரியவந்துள்ளது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா என்பது குறித்து விசாரணைகள் தொடர்கின்றன.

மின்னஞ்சல் அமைப்பிற்குள் அங்கீகரிக்கப்படாத எவரும் நுழையவில்லை எனத் தொழில்நுட்பச் சோதனையில் தெரியவந்துள்ளதால்இ உள்ளகச் செயற்பாடு தொடர்பிலும் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்தநிலையில்இ இந்தச் சைபர் குற்றத்தைத் தொழில்நுட்ப ரீதியாக ஆராய அரச இரசாயனப் பகுப்பாய்வு திணைக்களம், இலங்கை கணினி அவசரப் பிரிவு மற்றும் கொழும்பு பல்கலைக்கழக கணினி பீடாதிபதி ஆகியோரைக் கொண்ட விசேட நிபுணர் குழுவை நியமிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

அதேநேரம் விசாரணையின் முக்கியத்துவம் மற்றும் தொழில்நுட்பத் தன்மையைக் கருத்தில் கொண்டுஇ இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை நீதிமன்றப் பாதுகாப்பகத்தில் வைத்துப் பாதுகாக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles