சீட்டுப் பணம் கொடுக்காத குடும்பஸ்தர் மீது தாக்குதல்!

சீட்டுப் பணத்தை கொடுக்காததால் குடும்பஸ்தர்மீது கொடூர தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை திகதி யாழ்ப்பாணம் – உடுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் அறிய வருபவை வருமாறு,

உடுவில் நாகம்மாள் கோவில் பகுதியில் பெண் ஒருவர் சீட்டு பிடிக்கும் தொழிலை செய்து வருகிறார். உடுவில் – ஆலடியை சேர்ந்த நபர் ஒருவரும் அந்தப் பெண்ணிடம் சீட்டுக் கட்டி வந்துள்ளார்.

இந்த நிலையில், ஆலடியை சேர்ந்த நபருக்கு சீட்டு விழுந்துள்ளது. எனினும், சீட்டுப் பணத்தை பெண் கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்தநிலையில், பெண்ணின் கணவரை கடத்திச் சென்ற குழு ஒன்று அவர்மீது கொடூர தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பில் அறிந்த அந்தப் பகுதியில் நின்ற சுன்னாகம் போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்தனர்.

சந்தேகநபர்களை நீதிமன்றில் முற்படுத்த சுன்னாகம் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தாக்குதலுக்கு இலக்கான நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles