ஆஸ்திரேலியாவில் பொலிஸ் வாகனத்தை கொளுத்திய பெண் கைது!

ஆஸ்திரேலியா ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் நடந்த வன்முறையின்போது காவல்துறை வாகனத்துக்கு தீ வைத்த பூர்வக்குடி பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.

பூர்வக்கு மக்கள் வாழும் ஆலிஸ் ஸ்பிரிங்ஸ் பகுதியில் 5 வயது சிறுமியொருவர் கடத்தி கொலை செய்யப்பட்டிருந்தார்.

இக்கொலைச் செயலில் ஈடுபட்ட நபர் கைது செய்யப்பட்ட பிறகு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதனையடுத்து வைத்தியசாலைக்கு முன்னால் திரண்ட மக்கள் கலவரத்தில் ஈடுபட்டனர்.

சந்தேக நபருக்கு தமது கலாச்சார முறைகளின்படி தண்டனை வழங்க அவரை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரினர்.

இந்த வன்முறையின் போது, பெண்ணொருவர், காவல்துறை வாகனத்திற்குத் தீ வைக்க முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பயன்படுத்தியதுடன், பதற்றத்தைத் தணிக்கக் கைதியை வேறு இடத்திற்கு மாற்றினர்.

கலவரத்தில் பங்கேற்றதற்காக குறித்த பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles