மலசலகூடக் குழிக்குள் துண்டாடப்பட்ட கணவனின் சடலம்! – மனைவி கைது

மன்னாரில் வீடொன்றின் மலசலகூடக் குழியில் இருந்து ஆணொருவரின் சடலம் துண்டாட்டப்பட்ட நிலையில் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

மன்னாரைச் சேர்ந்த அருள் சேயா டெனீஸ்வரன் (வயது 38) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் கடந்த 2ஆம் திகதி படுகொலை செய்யப்பட்டு சடலம் துண்டாடப்பட்டு மலசல கூடக் குழிக்குள் போடப்பட்டு இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது

குறித்த சம்பவம் தொடர்பில் சடலமாக மீட்கப்பட்டவரின் மனைவி சந்தேகத்தில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles