ஈரானுடனான போர் விரைவில் முடிவுக்கு வரும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அத்துடன், ஈரான் அணு ஆயுதம் வைத்திருக்கும் வாய்ப்பை மறுக்கும் தனது முடிவு சரியானது என்பதை பெரும்பாலான மக்கள் புரிந்து கொண்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.
அணுசக்தி பேச்சுகளுக்கு ஒரு கட்டமைப்பை ஏற்படுத்தக்கூடிய 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தை இறுதிசெய்யும் தறுவாயில் இருப்பதாக வெள்ளை மாளிகை நம்புவதாக அமெரிக்காவின் அக்சியோஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
எனினும், இந்தப் புரிந்துணர்வை ஈரானின் மூத்த பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் ‘அது அமெரிக்காவின் விருப்பப்பட்டியல் என்று கூறி நிராகரித்துள்ளார்.
இதனிடையே, இந்தப் போர் நிறுத்தத்தை நிரந்தர முடிவாக மாற்ற பாகிஸ்தான் முயல்கிறது என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
