ஹன்ட்டாவைரஸ் பாதிப்பு ஏற்பட்ட சொகுசுக் கப்பலிலிருந்த இரு சிங்கப்பூர்வாசிகளுக்குக் கிருமித்தொற்று இல்லை என்பது உறுதியாகியுள்ளது.
CDA என்னும் தொற்றுநோய் அமைப்பு அதனைத் தெரிவித்தது.
அவர்கள் தேசியத் தொற்றுநோய்த் தடுப்பு நிலையத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர்.
அந்தக் கிருமியால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த ஒருவர் பயணம் செய்த விமானத்தில் அவ்விரு சிங்கப்பூர்வாசிகளும் இருந்தனர்.
அவர்களுக்குக் கிருமித்தொற்று இல்லையென்று உறுதியானாலும் அவர்கள் தொடர்ந்து 30 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவர்.
அங்கிருந்து வெளியேறும்போது அவர்களுக்குக் கிருமித்தொற்று இருக்கிறதா என்பது மீண்டும் உறுதிசெய்யப்படும்.
இந்நிலையில், உலகச் சுகாதார நிறுவனம் இன்னும் அதிகமானோர் ஹன்ட்டாவைரஸ் பாதிப்புக்கு ஆளாகலாம் என்று எச்சரித்துள்ளது.
உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் பரவலைக் கட்டுப்படுத்த முடியும் என்று சொல்லப்படுகிறது.
