பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் விஜய்!

தமிழக வெற்றிக் கழகத்தலைவர் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியுள்ளார்.

தமிழகத்தில் த. வெ. க. 108 இடங்களைப் பெற்றும் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை இல்லாத நிலையில் தொங்கு சட்டப்பேரவை உருவாகியுள்ளது.

த. வெ. கவுக்கு காங்கிரஸ் ஆதரவு அளித்திருக்கும் நிலையில் விடுதலை சிறுத்தைகள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவை கோரியிருந்தது.

தமிழ்நாட்டில் புதிய ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி இரண்டும் நிபந்தனையற்ற ஆதரவு தெரிவித்துள்ளன.

த. வெ. க. 108 சட்டமன்ற உறுப்பினர்கள் காங்கிரஸ் 5 இ இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிய கம்யூனிஸ்ட், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலா 2 உறுப்பினர்கள் என்றுஎன தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணியின் பலம் 118 ஆக உயர்ந்துள்ளது.

இதன்மூலம்இ தமிழ்நாட்டில் ஆட்சியமைக்க தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரும்பான்மை கிடைத்துள்ளது.

ஏற்கெனவே இரண்டு முறை ஆளுநரைச் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்த நிலையில் விஜய் மூன்றாவது முறையாக ஆளுநர் ஆர்.வி. ஆர்லேக்கரை இன்று சந்தித்தார்.

ஆளுநரைச் சந்தித்த விஜய், அவரிடம் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு கடிதத்தை வழங்கி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles