தமிழ்நாட்டின் முதலமைச்சராக நாளை பதவியேற்கிறார் விஜய்?

தமிழ்நாட்டின் 12ஆவது முதலமைச்சராக நாளை சனிக்கிழமை காலை விஜய் பதவியேற்கவுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் நடந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் தனித்து 108 ஆசனங்களை கைப்பற்றியது. விஜய் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சி ஆதரவளித்தது. இதைத் தொடர்ந்து விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், அறுதிப் பெரும்பான்மையான 118 ஆசனங்களை நிரூபிக்குமாறு விஜயிடம் கேட்டிருந்தார்.

இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவை ஆதரவு தெரிவித்தன. தொடர்ந்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியும், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சியும் ஆதரவளித்தன.

இதனால், தமிழக வெற்றிக் கழகத்துக்கு தற்போது 120 உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. இதைத் தொடர்ந்து, விஜய் இன்றைய தினம் – மே 08ஆம் திகதி தமிழக ஆளுநரை மீண்டும் சந்தித்து ஆட்சியமைக்க உரிமை கோரினார்.

இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நாளை – மே 9ஆம் திகதி முதலமைச்சராக பதவியேற்பார் என்று அவரின் கட்சியின் மூத்த நிர்வாகிகளை மேற்கோள்காட்டி தமிழ்நாடு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles