பாடசாலை ஒன்றில் நடத்தப்பட்ட கத்திக்குத்து தாக்குதலில் ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
அநுராதபுரம் – எப்பாவலை நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் இன்று புதன்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அந்தப் பாடசாலையில் கல்வி பயிலும் மாணவன் ஒருவனே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் எப்பாவலை பிரதேச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்த மாணவர்கள் அனைவரும் உயர்தர வகுப்பில் தொழில்நுட்ப பிரிவில் கல்வி கற்பவர்களாவர். அதே தரத்தில் விஞ்ஞான பிரிவில் கற்கும் மாணவரே தாக்குதலை நடத்தியுள்ளார்.
மாணவர்களிடையே கடந்த சில நாட்களுக்கு முன்னர் மோதல் ஏற்பட்டது. இதற்கு பழிவாங்கும்விதமாகவே இன்றைய தினம் கத்திக்குத்து தாக்குதல் நடத்தப்பட்டது என்றும் தாக்குதலை நடத்திய மாணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.
