யாழில் மின்னல் தாக்கியதிலா் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சுழிபுரம் மத்தி, சுழிபுரத்தை சேர்ந்த அண்ணாத்துரை வின்சன் (வயது 20) என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இது குறித்து மேலும் தெரியவருகையில்,
குறித்த இளைஞன் இன்றையதினம் (14) வயலில் வேலை செய்து கொண்டிருக்கும்போது அவர்மீது மின்னல் தாக்கியது.
இந்நிலையில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தற்போது அவரது சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து விசாரணைகளை வட்டுக்கோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
