தேசிய மக்கள் சக்தி, ஈ.பி.டி.பி. முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை புறக்கணித்தன!

முள்ளிவாய்க்கால் தமிழின படுகொலை நினைவேந்தல் நிகழ்வை யாழ்ப்பாணம் மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி, ஈ.பி.டி.பி. கட்சியினர் புறக்கணித்தனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் தமிழர் தாயகம் எங்கும் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த நிலையில் மே 14ஆம் திகதியான இன்று வியாழக்கிழமை யாழ். மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக முதல்வர் திருமதி மதிவதனி தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் ஆரம்பமானது. இதன்போது, சபா மண்டபத்தில் வைக்கப்பட்ட பிரத்தியேக நினைவுப்படத்துக்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்கள் மலர் தூவி அஞ்சலித்தனர்.

ஆனால், இந்த நினைவேந்தல் நிகழ்வை தேசிய மக்கள் சக்தி, ஈ. பி. டி. பி. என்று அறியப்பட்ட ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியினரின் உறுப்பினர்கள் புறக்கணித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles