நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 7 மாவட்டங்களை சேர்ந்த ஆயிரத்து 113 குடும்பங்களைச் சேர்ந்த 3 ஆயிரத்து 475 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
489 குடும்பங்களைச் சேர்ந்த ஆயிரத்து 310 நபர்கள் இடம்பெயர்ந்து 8 தற்காலிக நலன்புரி முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
88 வீடுகளும் ஒரு வணிக நிறுவனமும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் வெளியிட்டுள்ள இன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
