இந்தியாவின் நியூ டெல்லியில் நடைபெறும் 2026 BRICS கூட்டமைப்பு வெளியுறவு அமைச்சர்கள் மாநாட்டில், மலேசிய வெளியுறவு அமைச்சர் மொஹமட் ஹசன் ரஷ்யா மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர்களுடன் இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார்.
ரஷ்ய வெளியுறவு அமைச்சர் Sergey Lavrov உடனான சந்திப்பில், மலேசியா-ரஷ்யா உறவுகள் மற்றும் மத்திய கிழக்கு நிலவரங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.
பிராந்திய அமைதி மற்றும் நிலைத்தன்மையை பாதுகாக்க அனைத்து தரப்பும் உரையாடல், தூதரகம் மற்றும் பதற்றத் தணிப்பு முயற்சிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என இரு தரப்பும் வலியுறுத்தின.
அதேவேளை, இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கருடனான சந்திப்பில் பிரிக்ஸ் கட்டமைப்புக்குள் ஒத்துழைப்பை மேம்படுத்துவது, மலேசியா-இந்தியா உறவுகள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கருத்துகள் பரிமாறப்பட்டன.
இந்த சந்திப்புகள் இரு நாடுகளும் பரஸ்பர நலனுக்கான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் உறுதியை வெளிப்படுத்துவதாக மொஹமட் ஹசன் தெரிவித்தார்!
