சிரேஷ்ட ஆங்கில ஊடகவியலாளரும், அரசியல் பத்தி எழுத்தாளருமான டி.பி.எஸ். ஜெயராஜ் (D.B.S. Jeyaraj) காலமானார்.
அன்னாரின் இறுதிச் சடங்குகள் குறித்து குடும்பத்தினரால் பின்னர் அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கை அரசியல், இனப் பிரச்சினை, புவிசார் அரசியல், சினிமா குறித்து ஆய்வுக் கட்டுகரைகளை எழுதி வந்தார்.
மேலும் ‘தி ஐலண்ட்’ (The Island), ‘டெய்லி மிரர்’ (Daily Mirror), ‘டெய்லி எஃப்.டி’ (Daily FT) உள்ளிட்ட முன்னனி ஆங்கில நாளிதழ்களில் நீண்டகாலமாகப் பத்திகளை எழுதி வந்ததோடு, தனது பிரத்தியேக அரசியல் இணையத்தளத்தினூடாகவும் (dbsjeyaraj.com) உலக நடப்புகளைத் தொடர்ச்சியாகப் பதிவு செய்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
