ரஷ்யா மீது இன்று (ஞாயிறுக்கிழமை) உக்ரைன் நடத்திய மிகப்பெரிய டிரோன் தாக்குதல்களில், ஓர் இந்தியர் உட்பட நான்கு பேர் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. 12 பேர் காயமடைந்ததாகவும் தெரிகிறது.
ரஷ்யா மீதான இந்த டிரோன் தாக்குதலில் ஒரு இந்தியத் தொழிலாளி உள்பட 4 பேர் கொல்லப்பட்ட நிலையில், சிலர் காயமடைந்தனர். இரவு முழுவதும் நடந்த இந்த டிரோன் தாக்குதலில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களின் அடையாளம் இன்னும் முழுமையாகத் தெரியவில்லை என்று ரஷ்ய தரப்பு கூறுகின்றது.
உள்ளூர் அதிகாரிகளின் தகவல்களின்படி, ரஷ்யாவின் பல்வேறு இடங்களில் உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதல்களில் மொத்தமாக 4 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 12 பேர் காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி இந்த ட்ரோன் தாக்குதல்களை உறுதிப்படுத்தியதோடு, அவை முற்றிலும் நியாயமானவை என்றும் கூறியிருக்கிறார்.
