டொமி ரொபின்சனின் ‘யுனைட் தி கிங்டம்’ பேரணி மற்றும் பலஸ்தீன ஆதரவு நக்ஃபா தினப் பேரணி ஆகிய இரண்டு முக்கிய ஆர்ப்பாட்டங்களின் போது 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விரு குழுக்களுக்கு இடையே மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக, சுமார் £4.5 மில்லியன் செலவில் 4000 பொலிஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.
கணிசமான பொலிஸ் பாதுகாப்பும் இருந்தபோதிலும், பல்வேறு குற்றங்களுக்காக 43 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என பெருநகர பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் டொமி ரொபின்சன் பேரணியில், ரொபின்சன் உட்படப் பல பேச்சாளர்கள் அரசியல் ஈடுபாட்டிற்கு அழைப்பு விடுத்ததோடு, தற்போதைய தலைமையையும் விமர்சித்தனர்.
மேலும், கலந்துகொண்ட பலரும் Make England Great Again தொப்பிகளை அணிந்திருந்தனர். இது இங்கிலாந்தில் புதிய தலைமையை மக்கள் தேடுவதை அடிகோடிட்டு காட்டியுள்ளது.
