முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை

முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலையின் 17ஆவது ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் நாளை திங்கள்கிழமை முல்லைத்தீவு மாவட்டம் முள்ளிவாய்க்காலில் அமைந்துள்ள தமிழ் இனப்படுகொலை நினைவுத்தூபியில் நடைபெறவுள்ளதாக முள்ளிவாய்க்கால் தமிழ் இனப்படுகொலை நினைவேந்தல் பொதுக்கட்டமைப்பு அறிவித்துள்ளது.

நாளை முற்பகல் 10.15 மணிக்கு முள்ளிவாய்க்கால் பிரகடனம் வெளியிடப்படவுள்ளது. தொடர்ந்து முற்பகல் 10.29 மணிக்கு மணி ஒலிக்கப்பட்டு, 10.30 மணிக்கு அகவணக்கம் செலுத்தப்படவுள்ளது.

இதனைத் தொடர்ந்து முற்பகல் 10.31 மணிக்கு பொதுச் சுடர் ஏற்றப்படும். முற்பகல் 10.35 மணிக்கு மலர் அஞ்சலி நிகழ்வும் இடம்பெறவுள்ளது.

இந்நிகழ்வில் உயிரிழந்த உறவுகளை நினைவு கூர்ந்து அரசியல் பிரதிநிதிகள், சிவில் அமைப்புகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் என பலர் கலந்துகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Are you human? Please solve:Captcha


Stay Connected

0FansLike
0FollowersFollow
0SubscribersSubscribe

Latest Articles